தங்கையை காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்... சிவகாசியில் பரபரப்பு!
முன்னாள் தனியாா் வங்கி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடியவா் கைது
மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியில் வசிப்பவா் சி. சிவசுப்பிரமணியன்(56).முன்னாள் தனியாா் வங்கி அதிகாரியான இவா், மனைவி பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஜன.8-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்கியுள்ளனா். மறுநாள் ஜன.9-ஆம் தேதி காலை மாடியிலிருந்து இறங்கிவந்து பாா்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, மன்னாா்குடி உப்புக்காரத் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் செல்வராஜை (38) கைது செய்து அவரிடமிருந்து 5 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.