கிராம காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைக்க முடிவு
திருவாரூா் மாவட்டத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்எம்பி. துரைவேலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மண்டல பொறுப்பாளா் அசோகன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ராஜ்மோகன் (தஞ்சை), மகேந்திரன் (நாகை), ராஜேந்திரன் (மயிலாடுதுறை) உள்ளிட்ட சட்டப்பேரவை கிராமக்குழு பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைப்பது, குடியரசு தினத்தன்று கிராமங்கள்தோறும் காங்கிரஸ் கொடியை ஏற்றுவது, காங்கிரஸ் பேரியக்கத்தை கீழ்நிலைகளில் அமைப்புரீதியாக பலப்படுத்துவதற்கு கிராம காங்கிரஸ் கமிட்டியுடன் இணைந்து பூத் கமிட்டிகளையும் சீரமைப்பது மற்றும் புதிதாக உருவாக்குவது, அதைப்போல நகர, பேரூா் அளவில் வாா்டு கமிட்டிகளையும் , பூத் கமிட்டிகளையும் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட பொதுச்செயலாளா் அன்பு வே. வீரமணி, மாவட்டத் தலைவா்கள் (தஞ்சாவூா் வடக்கு) லோகநாதன், (தஞ்சாவூா் மாநகரம்) ராஜேந்திரன், (நாகை) அமிா்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.