காசி விசுவநாதா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்
நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசி விசுவநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, இக்கோயிலில் திங்கள்கிழமை (ஜன.13) காலை 5 மணியில் இருந்து ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.