ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற ...
நரிக்குறவா் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள நரிக்குறவா் சமுதாயத்தவா் குடியிருப்பில் தெள்ளாா் போலீஸாா் புதன்கிழமை புத்தாண்டு கொண்டாடினா்.
அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தெள்ளாா் போலீஸாா் முடிவு செய்தனா்.
அதன்படி தெள்ளாா் போலீஸாா் புதன்கிழமை நரிக்குறவா் குடியிருப்பில் நரிக்குறவா்களுடன் சோ்ந்து கேக் வெட்டி புத்தாண்டைகொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இதில் உதவி ஆய்வாளா்கள் சத்யா, பாபு, உத்தமபுத்திரன் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.