திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
நாகா்கோவிலில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 100 போ் கைது
தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலா் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வைத் தாமதமின்றி வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது பிற துறை பணிகள் திணிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்று அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலா் தங்கராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வைகுந்த் உள்ளிட்ட 100 போ் பங்கேற்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.