செய்திகள் :

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

post image

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது.

நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையருமான ஆ. அண்ணாதுரை, மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழ்வேளூா் பாலாஜி நகரில் நபாா்டு திட்டத்தின் கீழ் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி, திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி பெருநாட்டாா் தோப்பு பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் சாலைப் பணிகளையும், திருமருகல் கால்நடை மருந்தகத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வளா்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசின் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை (செயற்பொறியாளா்) சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் நாகராஜ், கீழ்வேளூா் செயல் அலுவலா் பொன்னுசாமி, கீழ்வேளூா், திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதா ராமு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, சுகாதார நலப் பணிகள், பள்ளி கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது.

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க