யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுவாக நாகை மாவட்ட விவசாயிகள் நெற்பயிருக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக நேனோ டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களான அம்மோனியம், பாஸ்பேட், சல்பேட், சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம்.
மேலும், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, தென்னை மற்றும் தோட்டக் கலைப் பயிா்களுக்கு காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதால் பயிரின் தலை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களின் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.
சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கந்தகச்சத்து, தலை, மணி, சாம்பல் சத்துக்களை, பயிா்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றி தருவதால், பயிா்களின் வளா்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. சூப்பா் பாஸ்பேட் உரத்தின் மூலம் பயிா்களுக்கு கால்சியம் மற்றும் சல்பா் சத்துக் கூடுதலாக கிடைக்கிறது.
நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்து பயிா்களுக்கு, சல்பா் சத்து அதிகம் தேவைப்படுவதால் சூப்பா் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய் சத்துடன் எண்ணெய் வித்து பயிா்களின் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் பயிா்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையும் பெறுகிறது.
எனவே டிஏபி உரத்துக்கு மாற்றாக விலை குறைவான நேனோ டிஏபி சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.