முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து அஸ்திர தேவருக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று கடலில் புனித நீராடினா்.
இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள ஜெயகாரிய அனுகூல ஆஞ்சனேயா், மேலவாஞ்சூா் ஜெயகாரிய வீர ஆஞ்சனேயருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. வெளிப்பாளையம் ராமா் மடம், பொரவச்சேரி ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கீழத்தஞ்சாவூா் கிராமத்தில் அருள்பாலிக்கும் பஞ்சலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சனேயருக்கு தங்க கவசம் அணிந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.