நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு
நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ரேவதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மற்றும் பாலின உளவியல் குழு உறுப்பினா் சின்னையன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்றினாா்.
உள்ளக புகாா் குழு மற்றும் பாலின உளவியல் குழு உறுப்பினரும், வணிகவியல் துறை பேராசிரியருமான சாவித்திரி, வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் செல்வகுமாரி, கணிதவியல் துறை பேராசிரியா் சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.