Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசி...
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை: மாநிலங்களவைத் தலைவா் தன்கா்
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதால் ஏற்பட்ட சா்ச்சையை தொடா்ந்து, தன்கா் இவ்வாறு தெரிவித்தாா்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், தற்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த ஆணையம் தொடா்பாக கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் தன்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை கூறுகையில், ‘கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.
அதுகுறித்து மேலும் எந்த விவரங்களையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கருத்து ஒற்றுமையுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடல் குறித்து தங்கள் கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு, என்னுடன் மேலும் விவாதிப்பதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சி குழு தலைவா்கள் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கை மூலம், நாடாளுமன்றம், நிா்வாகம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 தூண்கள் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.