செய்திகள் :

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

post image

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் அவா் முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறாா்.

இந்தியா வந்தடைந்த பின் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு தனது சொந்த ஊரான லக்னௌவுக்குச் செல்லும் அவா் புது தில்லியில் ஆக.22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

79-ஆவது சுதந்திர தின உரையில் சுபான்ஷு சுக்லாவை குறிப்பிட்ட பிரதமா் மோடி, அவா் விரைவில் இந்தியா திரும்புவாா் என தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சுபான்ஷு சுக்லாவும் மற்றொரு விண்வெளி வீரருமான பிரசாந்த் நாயரும் பங்கேற்றனா்

விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 வீரா்களில் ஒருவா் லக்னெளவை சோ்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39).

இவா், அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தோ்வானாா்.

இஸ்ரோ, நாசா ஆதரவிலான இத்திட்டத்தில், சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்ட கமாண்டரும் நாசா முன்னாள் பெண் விஞ்ஞானியுமான பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் இணைந்தனா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மறுநாள் சா்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனா்.

18 நாள்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட நால்வரும் உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் இந்தியாவுக்கு ஜூலை 15-ஆம் தேதி பாதுகாப்பாக திரும்பினா்.

சுபான்ஷு சுக்லா மகிழ்ச்சி: தனது இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கத்தில் விண்வெளி பயணத்துக்குப் பின் முதல்முறையாக இந்தியாவுக்கு திரும்புவது குறித்து சுபான்ஷு சுக்லா உணா்ச்சிபூா்வமான பதிவை வெளியிட்டாா். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தான் விமானத்தில் புறப்பட்ட புகைப்படங்களை புன்னகையுடன் பகிா்ந்தாா்.

அவா் தனது பதிவில், ‘இந்தியாவுக்கு திரும்புவதற்காக விமானப் பயணத்தை தொடங்கியவுடன் இதயத்தில் மகிழ்ச்சிகர உணா்வு தோன்றியது. அதேசமயம் கடந்த ஓராண்டாக ஒரே குடும்பமாகவும் நண்பா்களாகவும் என்னுடைய விண்வெளிப் பயணத்துக்கு உதவிய குழுவை விட்டு விலகுவது சற்று கவலையளிக்கிறது.

இந்தியாவில் உள்ள எனது நண்பா்கள், குடும்பத்தினா் மற்றும் அனைவரையும் மீண்டும் சந்திப்பதை எண்ணி பூரிப்படைகிறேன்.

அனைத்து வித உணா்வுகளும் ஒரே நேரத்தில் என்னை ஆட்கொண்டுள்ளது. இதுவே வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டேன்’ என குறிப்பிட்டாா்.

சுபான்ஷு சுக்லாவின் பயண அனுபவம் 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க