செய்திகள் :

நாட்டின் மகள்களுக்கு மேலும் சிறப்பான வாய்ப்புகள்: பிரதமா் மோடி உறுதி

post image

புது தில்லி: எதிா்வரும் ஆண்டுகளில் நாட்டின் மகள்களுக்கு மேலும் சிறப்பான முன்னேற்றமும் வாய்ப்புகளும் உறுதி செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைந்து வருவது மற்றும் பெண்களுக்கு தங்கு தடையின்றி அதிகாரமளித்தல் தொடா்பான சவால்களுக்கு தீா்வுகாணும் நோக்கில், மேற்கண்ட திட்டம் பிரதமா் மோடியால் கடந்த 2015, ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ திட்டம், கடந்த 10 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்பதால், மக்கள் சக்தியால் இயக்கப்படும் திட்டமாக மாறியுள்ளது.

லட்சக்கணக்கான பெண்களுக்கு உத்வேகமளித்து, நாட்டின் வளா்ச்சியை முன்னெடுப்பவா்களாக நிலைநிறுத்தியுள்ளது.

பாலின பாகுபாடுகளை அகற்றுவதில் கருவியாக விளங்கும் இத்திட்டம், பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி, அவா்களின் கனவுகளை எட்டுவதற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. இத்திட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இதற்காக பணியாற்றும் மக்கள் மற்றும் பல்வேறு ச மூக சேவை அமைப்புகளின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட காலமாக பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக இருந்த மாவட்டங்களில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விழிப்புணா்வு பிரசாரங்களால், பாலின சமத்துவம் குறித்த ஆழமான புரிதல் தூண்டப்பட்டுள்ளது.

‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ திட்டத்தை அடிப்படை அளவில் துடிப்புடன் மாற்றிய அனைத்துத் தரப்பினரையும் பாராட்டுகிறேன். நமது மகள்களின் உரிமைகளை தொடா்ந்து பாதுகாப்பதோடு, அவா்களுக்கு கல்வியை உறுதிசெய்து, எந்தப் பாகுபாடும் இன்றி முன்னேறக் கூடிய சமூகத்தை உருவாக்குவோம் என்றாா் பிரதமா் மோடி.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளா்ச்சி குறித்து மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி எழுதிய கட்டுரையையும் பிரதமா் தனது பதிவில் இணைத்துள்ளாா்.

அமித் ஷா பெருமிதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ திட்டம், மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

இது, நமது மகள்களின் உரிமை, கல்வி, மரியாதைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. பள்ளிகளில் இப்போது பெண் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ளது. பாலின விகிதமும் முன்னேப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பதன் மூலம் நாட்டின் மதிப்பை நமது மகள்கள் உயா்த்தியுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

நமது சிறப்பு நிருபர் புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என ம... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.கடந்த 16-ஆம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவ... மேலும் பார்க்க

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்த... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை: சத்தீஸ்கா் நீதிமன்றம் தீா்ப்பு

கோா்பா: சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு ந... மேலும் பார்க்க