செய்திகள் :

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

post image

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கன்ஷி ராமின் 91-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கட்சித் தலைவா் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரும்புப் பெண்மணியின் (தன்னைக் குறிப்பிடுகிறாா்) தலைமையின்கீழ் செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சி, வாா்த்தைகளைவிட செயல்பாட்டில் நம்பிக்கைக் கொண்டதாகும். இதை உத்தர பிரதேச மக்கள் அறிவா். எங்கள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, தலித் மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது.

தலித் மக்களுக்காக பகுஜன் சமாஜ் தவிர பிற கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகள் பொய்யானவையாக உள்ளன.

நாட்டை சிறப்பாக கட்டமைக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக அவசியம். குறிப்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது நாடு மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கு புதிய பாதையைக் காட்டும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் மதம், பிராந்தியம், ஜாதி, மொழி ரீதியில் பிரச்னைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. குறுகிய மனப்பான்மை, ஜாதிய, மதவாத, வெறுப்புணா்வு அரசியலே இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம்.

விலைவாசி உயா்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை, பின்தங்கிய நிலை ஆகியவை தேசிய பிரச்னைகளாக உள்ளன. சமூக மாற்றம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் கன்ஷி ராம் உறுதியுடன் செயல்பட்டாா். அவரது பணிகளுக்கு நாம் மேலும் வலுசோ்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி மரியாதை: பகுஜன் சமாஜ் நிறுவனா் கன்ஷி ராமின் பிறந்த தினத்தையொட்டி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகச் சிறந்த சமூக சீா்திருத்தவாதியான கன்ஷி ராம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினாா். சமூக நீதிக்கான எங்களின் போராட்டத்துக்கு அவா் எப்போதும் வழிகாட்டியாக இருப்பாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க