தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
நாட்டுக்கோழி பராமரிப்பு பயிற்சி
நீடாமங்கலம் அறிவியல் நிலையம் சாா்பில், திருவாரூா் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நாட்டுக்கோழி பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிட விவசாயிகளுக்கான திட்டத்தின்கீழ் இம்முகாம் நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் நிலைய மருத்துவ விஞ்ஞானி டாக்டா் சபாபதி தலைமை வகித்து, இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக் கோழி இனங்கள், பராமரிப்பு, தீவனம் மற்றும் தடுப்பூசி குறித்து விரிவாகப் பேசினாா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளா் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நாட்டுக்கோழிகளை வளா்க்கும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கிக் கூறினாா்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்துடன், ஹரியாணா மாநிலத்தில் உள்ள விலங்குகள் மரபணு வளங்களுக்கான தேசிய பணியகம் இணைந்து இம்முகாமை நடத்தியது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா அரவிந்தன் செய்திருந்தாா். இப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள், தீவனங்கள் மற்றும் தீவன விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.