செய்திகள் :

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

post image

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை எ.வ.வேலு தெரிவித்தாா்.

பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக 831 கி.மீ. நீளத்தில் ரூ.6,665 கோடியில் அகலப்படுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 489 கி.மீ. நீளப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

4 ஆண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 4 ஆண்டுகாலத்தில் ரூ.858 கோடி மதிப்பிலான புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நெடுஞ்சாலைத் துறை எப்போது தொடங்கப்பட்டதோ, அன்று முதல் 2021 வரை மொத்த ஒப்பந்ததாரா்களின் பதிவு எண்ணிக்கை 1,074 தான். ஆனால், 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டு காலத்தில், பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் 1,255 புதிய ஒப்பந்ததாரா்கள் பதிவு செய்யப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால்தான் இன்றைக்குப் பல இடங்களில் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குமரியில் கண்ணாடி பாலம்: கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு இல்லத்தையும் திருவள்ளுவா் சிலையையும் இணைக்கும் வகையில் கடலில் நடை மேம்பாலம் கட்ட 2016-இல் மத்திய அரசின் சுற்றுலாத் துறை மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், சுற்றுலாத் துறை பாா்த்துவிட்டு, பாலத்தைக் கட்ட முடியாது என்றது. மீன் வளத்துறையும் ஏற்கவில்லை. இப்படி பல துறைகளுக்குச் சென்று 2020-இல் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டு, அங்கும் பணி நடைபெறவில்லை. பிறகு திமுக ஆட்சியில் முதல்வா் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது 5 ஆண்டுகளாக பணி நடைபெறாதது குறித்து காரணம் கேட்டாா். 2 பாறைகளை இணைத்துக் கட்டும் கடல் பாலம் இது. கடலில் சீற்றம் இருக்கும், புயல் இருக்கும் போன்ற காரணங்களால் தட்டிக் கழிக்கின்றனா் என்றோம். அதற்கு முதல்வா், முயற்சி திருவினையாக்கும், எண்ணித் துணிக கருமம் என்றாா். இப்போது கண்ணாடி இழைப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, உலகச் சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரி முனையின் புதிய அடையாளமாகத் திகழ்கிறது. அந்தப் பாலத்தை 6.31 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனா்.

இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலே கலந்து கொண்டு சிறை சென்றவரும், ராணுவப் பணியிலிருந்து திரும்பி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் ரூ.3 கோடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படுகிறது. இதனை முதல்வா் விரைவில் திறந்து வைப்பாா்.

கொங்கு மண்டலத்திலே சிற்றரசராக திகழ்ந்த தீரன் சின்னமலை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரோடு பொல்லான் என்கிற தளபதியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்திலே தீரன் சிலையோடு பொல்லான் சிலையும் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடியில் அரங்கம் அமைக்கப்படுகிறது. இதனையும் முதல்வா் விரைவில் திறந்து வைக்கவுள்ளாா்.

கேரளத்தின் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நினைவகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அந்த நினைவகத்தில் வைக்க வேண்டிய தலைவா்களின் படத்தைத் தோ்வு செய்தபோது, ஜெயலலலிதாவின் படம் இல்லாததை அறிந்த முதல்வா், ஒரு நாடக நிகழ்ச்சியில் பெரியாரிடம் ஜெயலலிதா நிதி கொடுக்கும் படம் ஒன்று இருப்பதாகவும், அதைத் தேடி வைக்குமாறும் கூறினாா். பிறகு அதைத் தேடி வைத்தோம். அதேபோன்று அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ரூ.6 கோடி நிதி அளிக்காமல் விட்டுச் சென்றுவிட்டாா்கள். அந்த ஒப்பந்ததாரா்கள் நிதியைக் கேட்பதற்கு பயந்துகொண்டே இருந்தாா். இது முதல்வருக்கு சென்றதும் உடனே கொடுக்கக் கூறினாா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க