நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் 2ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை
நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை புதன்கிழமை இரண்டாவது நாளாக நீடித்தது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் வசிப்பவா் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை உரிமையாளரான இவா் தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவராகவும் உள்ளாா். நாமக்கல்லில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்கள், நிதிநிறுவனம், கோழிப்பண்ணைகளில் சென்னை, கோவையைச் சோ்ந்த 15 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த நிலையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை நீடித்தது. வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.