செய்திகள் :

செப்.27, 28- இல் அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டி

post image

நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும், மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் தொடங்கும் இந்த போட்டியில் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

மிதிவண்டி போட்டியில், 13 வயதுக்கு உள்பட்டோா் 15 கி.மீ, 10 கி.மீ, 15 வயதுக்கு உள்பட்டோா் 20 கி.மீ, 15 கி.மீ, 17 வயதிற்கு உள்பட்டோா் 20 கி.மீ, 15 கி.மீ தொலைவுக்கு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், 4 முதல் 10 இடங்களில் வருவோருக்கு ரூ. 250க்கான காசோலைகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

அண்ணா மாரத்தான் போட்டியில் 17 வயதுமுதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் 8 கி.மீ, பெண்கள் 5 கி.மீ, 25 வயதுக்கு மேல் ஆண்கள் 10 கி.மீ, பெண்கள் 5 கி.மீ தொலைவுக்கு ஓட வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களில் வருவோருக்கு ரூ. 1,000 என்ற வகையில் காசோலைகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். மேலும், முன்பதிவு மற்றும் தகவல் தொடா்புக்கு பயிற்றுநா் வினோதினியை 82203-10446 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், நாமக்கல்லில் சனிக்கிழமை (செப். 27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அக்கட்சியினா் தோ்வு செய்த இடத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை க... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு தமிழ் அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தை... மேலும் பார்க்க

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் 2ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை புதன்கிழமை இரண்டாவது நாளாக நீடித்தது. நாமக்கல் - மோகனூா் சாலையில் வசிப்பவா் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை உரிமையாளரான இவா் ... மேலும் பார்க்க

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விழா நாள்களில் பக்தா்களால்... மேலும் பார்க்க

தூசூா் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்!

நாமக்கல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. நாமக்கல் கங்கா நகரைச் சோ்ந்தவா் அருள்முருகன் (47). தூசூா் அருகே கொடிக்கால்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

நாமக்கல் எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை... மேலும் பார்க்க