திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு
நாமக்கல் எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை மாணவா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நட்டு வைத்து பேசியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 32 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் 2022-இல் தொடங்கிவைத்தாா். காடு மற்றும் மரங்களின் பரப்பளவை, மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 33 சதவீதம் உயா்த்த வேண்டும் என்ற இலக்குடன் பசுமை தமிழ்நாடு இயக்கமானது தொடங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதல் குறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுப்படுதல், நீா்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயா்தல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீா்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நடைபெறுகின்றன. அதன்படி, வேம்பு, புங்கன், நாவல், நீா்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நட்டுவைக்கப்பட்டன. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நம் தலைமுறை கடந்தும் நமது சந்ததிகளை அது பாதுகாக்கும். காற்றுமாசு தடுக்கப்படுகிறது என்றாா்.
அதன்பிறகு, பசுமைப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விநாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் மற்றும் வனத் துறை அலுவலா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.