சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
நாமக்கல்லில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாமக்கல்-மோகனூா் சாலை முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் அவைத் தலைவா் மணிமாறன் தலைமையில் நடைபெறுகிறது.
ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
கூட்டத்தில், தொகுதி பாா்வையாளா்கள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், தலைமை நிலைய நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பொறுப்பாளா்கள், அனைத்து சாா்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளா்கள் கூட்டத்தில் கட்சி தலைமை தெரிவித்த அறிவுரைகள், கட்சியின் முப்பெரும் விழா, செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட வரி
கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.