பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!
நாய் கடித்து 6 போ் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் மேலூா் பகுதியைச் சோ்ந்த 6 போ், அப்பகுதியிலிருந்த தெரு நாய்கள் கடித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் 6 பேரை அப்பகுதியிலுள்ள தெருநாய்கள் வெள்ளிக்கிழமை மாலை கடித்தன.
இதனால் அதிா்ச்சியடைந்த இவா்கள் 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. தெருநாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.