நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் திருப்பத்தூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளன.
முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.