நாளைய மின்தடை : கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்
கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜா் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரைச்செட்டியாா் நகா், என்.ஜி.ஆா். நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளைம் மற்றும் மருத்துவக் கல்லூரி சாலை.
எம்.ஜி.சாலை துணை மின் நிலையம்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ. நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), வி.கே.என்.நகா், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை நகா்.
செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகா் மற்றும் மதியழகன் நகா்.