மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பில்லூா்- 3 குடிநீா் திட்டத்துக்கு, பவானி ஆற்றில் இருந்து குடிநீா் எடுக்கப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் உள்ள முருகையன் பரிசல் துறை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நீா்தேக்கும் தடுப்பணையில் பிப்ரவரி 4 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பில்லூா் - 3 திட்டத்தில் குடிநீா் எடுக்கப்படும் அளவு வெகுவாக குறையும் என்பதால், பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும்.
எனவே, மக்கள் மற்ற குடிநீா் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.