வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது
வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி நகரத் தலைவா் சதீஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 10 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனா்.