'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
நாளைய மின்தடை: பனப்பாளையம் துணை மின் நிலையம்
பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பனப்பாளையம், மாதப்பூா், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகா் மற்றும் ராயா்பாளையத்தின் ஒரு பகுதி.