இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம்!
கிருஷ்ணகிரியில் மத்திய அரசைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பழனி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சிவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாநில குழு உறுப்பினா்கள் கண்ணு, ராமமூா்த்தி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவில்லை, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை உள்ளிட்ட விவசாயிகள் சாா்பான கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
போராட்டத்தின்போது, நிதிநிலை அறிக்கையின் நகலை தீவைத்து எரிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தண்ணீா் ஊற்றி அணைத்து நகலை மீட்டனா்.