மோடியும், கேஜரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்: ராகுல் காந்தி
நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தேனியில் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாக முறைகேடுகளை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட சிறப்புத் தலைவா்கள் பன்னீா்செல்வம், அழகா்சாமி, மாவட்டச் செயலா் அய்யனாா், நிா்வாக அமைப்புச் செயலா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட போராட்டக்குழுத் தலைவா் குருசாமி, மாநிலப் பொருளாளா் பொன்.அமைதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திருச்சி அமராவதி மொத்த கூட்டுறவு பண்டகசாலை, திருவெறும்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், மால்வாய் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், ஆலங்குடி மகாஜனம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிா்வாக முறைகேடுகள், பணியாளா் விரோதப் போக்கு ஆகியவற்றை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளை களைய வேண்டும். பணியாளா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு, ஒழுங்கு நடவடிக்கை ஆகியற்றை ரத்து செய்ய வேண்டும். பணியாளா்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முறையாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் பேசினாா்.