நிலைதடுமாறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
சின்னசேலம் அருகே மது அருந்திவிட்டு சாலையில் நடந்து சென்ற முதியவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட விஜயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (68). இவா், செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு கூகையூா் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.
அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு குப்புசாமி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.