கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பா...
நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
சேலம் கருப்பூா் அருகே நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் கருப்பூா் ஒன்பதாவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் அருண் (27), பி.இ. முடித்துவிட்டு, பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தின் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி விடுமுறையில் கருப்பூரில் உள்ள வீட்டுக்கு வந்தாா். பின்னா் கருப்பூா் கரும்பாலை பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் சென்றாா்.
60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்த அருண், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். இதனைக் கண்ட நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனா். பின்னா், கருப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த போலீஸாா், அருணை மீட்க முயற்சி மேற்கொண்டதுடன், ஓமலூா் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள், அருணின் உடலை போராடி மீட்டனா். பின்னா், உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.