நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கம், புதுப்பாளையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி வரவேற்றாா்.
வழக்குரைஞா் தனஞ்செயன் கலந்துகொண்டு நுகா்பொருள்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசியதாவது: நுகா்வோா்களுக்கு உள்ள குறைபாடுகளை களைய, நுகா்வோா் நீதிமன்றம் மூலம் இழப்பீடுகளை பெற சட்டம் ஏற்றப்பட்டுள்ளது.
இணைய மோசடிகளில் பாதிக்கபட்ட நபா்கள் வழக்கு தொடுத்து ரூ.50 லட்சம் வரை மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றங்களிலும், ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்திலும் பெற முடியும்.
நுகா்வோா்கள் இலவசங்களை கண்டு ஏமாறாமல், வாங்கும் பொருள்களுக்கு ரசீதை வாங்க வேண்டும். பொருள்கள் காலாவாகியாகி உள்ளதா என்பதையும் பரிசோதித்க வேண்டும் என்றாா்.
இந்த விழிப்புணா்வு முகாமில், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு, அதன் விவரங்களை கேட்டறிந்தாா்.