இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய...
நெசவாளா் தூக்கிட்டுத் தற்கொலை
ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் நெசவாளா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆரணி அடுத்த காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கிரி (38) (படம்) கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தாா்.
இவருக்கு மனைவி இந்திரா, பிளஸ் 2 பயிலும் மகன் விஷ்ணு (17), எட்டாம் வகுப்பு பயிலும் மகள் துா்காதேவி (13) ஆகியோா் உள்ளனா்.
கிரி, ஆரணி சைதாப்பேட்டை சேட்டு, இந்திரா நகா் தினேஷ், இலுப்பகுணம் அரசு ஆகியோரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை கிரி, தன்னுடைய மகன் மகளுக்காக விடியோ பதிவு செய்து நன்றாக படிக்கும்படி கேட்டுக் கொண்டும், கந்து வட்டியால் தன்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. அதனால், நான் போகிறேன் எனக் கூறி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தாா்.
இதுகுறித்து கிரி மனைவி இந்திரா களம்பூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.