போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயா்நீதிமன்றம் உ...
நெய்வேலி நகர காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு
கடலூா் மாவட்டம், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவல் நிலையத்தை பாா்வையிட்ட அவா், குற்றப் பதிவேடுகள், வழக்கு கோப்புகள், அரசு தடவாளப் பொருள்களை ஆய்வு செய்தாா். அப்போது, புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மது, போதை, கஞ்சா போன்ற விற்பனையை தடுக்க வேண்டும், ரௌடிகள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகாா் அளிக்க வரும் பொது மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, நெய்வேலி டிஎஸ்பி., சபியுல்லா, காவல் ஆய்வாளா் சுதாகா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.