புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
நெல்லை ரயில் நிலையத்தில் சோதனை
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மோப்பநாய் உதவியுடன் பாா்சல் அலுவலகம், நடைமேடைகள், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனா். மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் தண்டவாளப் பகுதிகளிலும் சோதனை செய்யப்பட்டது. மேலும், இரு நாள்களுக்கு சோதனை தொடரும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.