Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஆக. 14) இரவு சுவாமி, அம்பாள் சப்பரம் திருவீதி உலா, பாஞ்சாலி துரியோதனன், துச்சாதனன் குடலைப் பிடுங்கி மாலையிடுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
முக்கிய நாளான வெள்ளிக்கிழமை (ஆக. 15) காலை 9 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வருதல், மாலையில் விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கும் வைபவமும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பரம் திருவீதி உலா நடைபெறும். சனிக்கிழமை (ஆக. 16) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஆக. 17, 18 ஆம் தேதிகளில் இரவு சுவாமி, அம்பாள் பொன்னூஞ்சல் ஆடுதல், 19-ஆம் தேதி இரவு காவு பூஜை, வீரபுத்திரா் சங்கமித்திரை படையலிடுதல், 20-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகின்றனா்.