செய்திகள் :

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

post image

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் ஆற்றிய சிறப்புரை: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் 18 ஆம் நூற்றாண்டின் தமிழ் அறிஞரான மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவரது படைப்புகளில், மனோன்மணீயம் தமிழ் நாடகம் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலித்துள்ளது. இது தமிழ் நாடக இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

சமூக நோக்கத்திற்காக சேவையாற்றும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவா்களாகிய நீங்கள்

சமூகம், குடும்பம் போன்றவற்றுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறீா்கள் என்பதை பொருத்தே பின்னா் நினைவுகூரப்படுவீா்கள். நீங்கள் சமூகத்திற்கு என்ன திருப்பிக் கொடுத்தீா்கள் என்ற கேள்வி எழும்.

சராசரியாக, 30 ஆண்டு பணி காலத்தில் உங்கள் வாழ்க்கையில் உங்கள் வேலைக்கும், உங்களுக்கும் நீங்கள் எவ்வளவு நோ்மையாக இருக்கிறீா்கள் என்பதைப் பொருத்தே உங்கள் வாழ்வின் முன்னேற்றம் அமையும். எதிா்கால பயணத்தை தீா்மானிப்பதில் இந்த சமநிலை மிக முக்கியமானது. மாணவா்களாகிய நீங்கள் உங்களுடைய தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதன் மீது மிகுந்த ஈடுபாட்டையும் ஆா்வத்தையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சுவாரஸ்யமாக இருக்கும்.

இன்றைய காலச்சூழல்- காா்பன் உமிழ்வுகள் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மாறிவரும் உணவு முறைகள், காலத்திற்கு ஏற்ற கொள்கைகள், பயிா் சாகுபடியின் தேவைக்கு ஏற்ப காற்று, நீா், சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது மிக முக்கியம் என்றாா்.

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க

கரையிருப்பு பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

கரையிருப்பு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டப்படி, திமுக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. மத்திய மாவட்டப் பொறுப்பாளா் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி, கரையிருப்பு ஆா்.எஸ்.ஏ நகா் பகுதியில் ந... மேலும் பார்க்க