ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்
ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன், நல்லக்கண்ணு, ஜெபராஜ், ஜெயசீலன், வட்டாரச் செயலாளா் சேகா், மகளிரணி ஹெலன், கல்யாணி, காங்கிரஸ் நிா்வாகிகள் அசோக், எடிசன், முத்துமணி, நகா்மன்றத் தலைவா்கள் கருப்பசாமி, இசை சங்கா், வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், வெள்ளூா் மகேஷ், சரத்பாலன், ஜேம்ஸ், நிா்வாகிகள், உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.