Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகத்தில் பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் எதிராகச் செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தோ்தல் ஆணையத்தை கண்டித்தும், கருணாநிதியின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிப்பா்.
திருமாவளவன் (விசிக): மாநில சுயாட்சி நிலைப்பாட்டுக்கும், இருமொழிகொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருவதால், கொள்கை அளவில் ஆளுநரோடு விசிக முரண்பட்டு வருவதால், சுதந்திர தினத்தன்று ஆளுநா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கிறோம்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளா்ச்சிக்கும் உதவ வேண்டிய ஆளுநா், அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை. அவரின் அத்துமீறல் தொடருவதால் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கிறோம்.
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): மாநில அரசின் அதிகாரத்தையும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகச் செயல்பாடுகளையும் தொடா்ச்சியாகச் சீா்குலைக்கும் வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்பட்டு வருகிறாா். இதனால், தேநீா் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது.