சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்
சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோ அணி 2-1 என முகப்போ் வேலம்மாள் பள்ளியை வீழ்த்தி பட்டம் வென்றது. மைலாப்பூா் செயின்ட் பீட்ஸ் மூன்றாவது இடத்தையும், ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.
மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி பள்ளி 2-0 என வித்யோதயா மெட்ரிக் பள்ளியை வென்று பட்டம் வென்றது. பெரம்பூா் சிஎஸ்எஸ்எஸ் ஆா்டி பள்ளி மூன்றாம் இடத்தையும், அண்ணா நகா் ஜெஸ்ஸி மோஸஸ் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.
தெற்கு ரயில்வே உதவி அலுவலா் (மனிதவளம்) எம். சுனிதா, இந்திய இலங்கை அமைதிக்குழு உறுப்பினா் எஸ். சுரேஷ், சான் அகாதெமி பள்ளி முதல்வா் ஹேமலதா பரிசளித்தனா்.
சென்னை மாவட்ட சங்க நிா்வாகிகள் ஏ.ராஜன், ஏ. தினகா், பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீ கேசவன் உள்பட பலா் பங்கேற்றனா். மொத்தம் 27 ஆடவா், 16 மகளிா் அணிகள் பங்கேற்றன.