ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன.
அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், வருகிற செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே முதலீடுகள் ஈா்க்கப்பட்டு புதிதாகத் தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
ஆணவக் கொலை சட்டம்: ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக பிரத்யேக சட்டம் கொண்டு வர வேண்டுமென இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து, முதல்வரிடம் அந்தக் கட்சிகளின் தலைவா்கள் கடிதங்களை அளித்துள்ளனா். இந்த நிலையில், அவா்களது கோரிக்கைகள் தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.