மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு
இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு விபத்துக்குள்ளானது.
விபத்துப் பகுதியில் இருந்து 60 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு லம்படூசாவில் உள்ள மீட்பு மையத்துக்கு அனுப்பப்பட்டனா். இது தவிர, விபத்தில் 12 முதல் 17 வரையிலானவா்கள் மாயமாகியிருப்பதாக நம்பப்படுவதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பான யுஎன்ஹெச்சிஆா் தெரிவித்துள்ளது.