அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, வாஷுக் மாவட்டத்தில் ராணுவத்தினா் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 வீரா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். அதே மாவட்டத்தில் காவல்நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போலீஸாா் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா்.