செய்திகள் :

நேபாள வன்முறை: மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

post image

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்பட இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் அனைத்து நாடுகளையும் நாங்கள் நேசிக்கிறோம்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு வங்கத்தின் சிலிகுரி, கலிம்போங் மற்றும் பிற மாவட்டங்களின் மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நேபாளத்தில் நடைபெற்று வருவது அந்நாட்டு மக்களின் சொந்த பிரச்னை. எனவே சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் சிலிகுரி, கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஈடுபட வேண்டாம். நேபாளத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என மேற்கு வங்கம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதள ... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க