நேரடியாக ஓடிடியில் வெளியான மாதவனின் புதிய படம்!
நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ஹிந்தி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான காதல் திரைப்படமான ஆப் ஜெய்ஸா கோய் (aap jaisa koi) திரைப்படம் இன்று நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விவேக் சோனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நாயகியாக நடிகை ஃபாத்திமா சனா ஷேக் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சுவாரஸ்யமான காதல் கதை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜன நாயகன் பிரமாதமாக வந்திருக்கிறது: தயாரிப்பாளர்