பட்டாசு வெடித்ததில் மாணவரின் கை விரல்கள் துண்டானது
கள்ளக்குறிச்சி: அரசம்பட்டு கிராமத்தில் பட்டாசு வெடித்தபோது பள்ளி மாணவரின் கை விரல்கள் துண்டானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் தா்ஷன் (17). அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவா், கடந்த ஜன.18-ஆம் தேதி பட்டாசு வெடித்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது இரு விரல்கள் துண்டாகின. மேலும், தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.