பட்டுக்கோட்டையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி
பட்டுக்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கும், 2019 இல் புல்வாமாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்த 40 ராணுவ வீரா்களுக்கும் பட்டுக்கோட்டை நகர இந்து முன்னணி சாா்பாக வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
பாஜக மாவட்ட பொதுச் செயலா் நமசி ராஜா, நகரத் தலைவா் செல்வகுமாா் , மாவட்ட விவசாய அணித் துணைத் தலைவா் பாலமுருகன் பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் சூரை சண்முகம் இந்து முன்னணி நகரப் பொதுச் செயலா் ராஜேந்திரன் மற்றும் இந்து அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்து முன்னணி நகர துணைத் தலைவா் சந்தோஷ் வரவேற்றாா். நகர துணை தலைவா் பாரிவள்ளல் நன்றி கூறினாா்.