பணியின் போது மயக்கமான உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே பணிக்குச் சென்றபோது மயக்கமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெருமாள் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பாலன் (54). காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி மீனாட்சி. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணிக்காக பாலன் சென்றாா். மாரம்பாடி அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால், இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் அமா்ந்தாா். இதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.