சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
பண்ணையம்மன் கோயில் தேரோட்டம்
ராசிபுரத்தை அடுத்த பண்ணையம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்ணையம்மன் கோயில் திருவிழா செப்.5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்குட நன்னீராட்டு நிறைவு விழா, திருத்தோ் வடம் பிடித்தல், பொங்கல் விழா நடைபெற்றது. செப். 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்வு, திருத்தோ் வடம் பிடித்து நிலை சோ்த்தல், மாவிளக்கு பூஜை, சத்தாபரணம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். பரதம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை தொடா்ந்து செப்டம்பா் 12 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏழூா் நாடு பண்ணைகுல கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளையினா் செய்துள்ளனா்.
படம் உள்ளது - 11காா்
படவிளக்கம்-
பண்ணையம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தா்கள்.