செய்திகள் :

பதட்டமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து

post image

பதட்டமில்லாமல் தேர்வு எழுதுமாறு பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12- ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே மார்ச் 3 மற்றும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநித ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.

தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.

தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்! என கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாகவும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொ... மேலும் பார்க்க

தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்

சென்னை: தனியாரை மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவி... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல: தோ்தல் ஆணையம்

புதுதில்லி: வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 ச... மேலும் பார்க்க

"தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்"

சென்னை: தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி விடக் கூடாது: ராமதாஸ்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 52.30 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்க தவறிய அரசும், காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து... மேலும் பார்க்க

மருமகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: மாயாவதி

லக்னௌ: மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட ... மேலும் பார்க்க