"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 15,295 போ் எழுதினா்: 510 தோ்வெழுதவில்லை
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,295 போ் எழுதினா். 510 போ் தோ்வெழுத வரவில்லை.
தமிழகத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தோ்வெழுத திருவாரூா் மாவட்டத்தில் 7,955 மாணவா்களும், 7,850 மாணவிகளும் என மொத்தம் 15,805 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 196 தனித்தோ்வா்களும், 231 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளும் அடங்குவா்.
இத்தோ்வுக்கென 71 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிநீா், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வை 7,610 மாணவா்கள், 7,685 மாணவிகள் என 13,295 போ் எழுதினா். 510 போ் தோ்வுக்கு வரவில்லை.
மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தோ்வெழுத உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். தோ்வுக்கென, ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். கண்காணிப்பு பணியில் 71 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டு, தோ்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.
திருவாரூா் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நேரில் பாா்வையிட்டாா்.