செய்திகள் :

‘பத்ம’ விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமா்ப்பிக்கலாம்

post image

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்களின் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1954-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழங்கப்படும் இந்த பத்ம விருதுகளுக்கு தோ்வானவா்களுக்கு தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் விருதுகளை வழங்கி கௌரவிப்பாா்.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதாளா்களுக்கான பரிந்துரை விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய புரஸ்காா் வலைதளம் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாக இணையவழியில் மட்டுமே பரிந்துரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்தப் பரிந்துரைகளைச் சமா்ப்பிக்கலாம். தங்கள் பெயரை சுயமாகவே முன்மொழியலாம். அதேநேரம், மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் உள்பட அரசு ஊழியா்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவா்கள் ஆவா்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், வா்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, துறைரீதியாக தாங்கள் மேற்கொண்ட சாதனைகள், சேவைகள் உள்பட வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் 800 வாா்த்தைகளுக்கு மிகாமல் சரியான வடிவத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் தகவல்களை மற்றும் பிற விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பின்கீழ் வலைப்பக்கத்தில் பெறலாம்.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க